Books in the Tamil Language
Published on 10 November 2025 Modified on 13 November 2025 43 downloads
திரிதண்டி சுவாமி ஸ்ரீ ஸ்ரீமத் பக்திவேதாந்த நாராயண கோஸ்வாமி மகாராஜாவின் போதனைகளையும் ஜீவ தர்மத்தின் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்த பிரபலமான சிறு புத்தகம், வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைய மக்கள் பின்பற்றும் மூன்று தனித்துவமான பாதைகளை கோடிட்டுக் காட்டுகிறது.
அனைத்து விதமான பாதைகளிலும் ஶ்ரீராதா கிருஷ்ண தம்பதிகளிடம் வைக்கும் பரிசுத்தமான அன்பு மட்டுமே இந்த ஜடவுலகத்தின் அனைத்து இன்பங்களை விடவும் மிக உயர்ந்தது. பரிசெத்தமான கிருஷ்ண பக்தி அனைத்து மார்க்கங்களுக்கும் அப்பாற்பட்டது. அதுமட்டுமல்ல, பிரம்ம மோட்சம் மற்றும் ஐந்து விதமான மோட்சங்களை விடவும் கிருஷ்ண பக்தி மட்டுமே மிகவும் உயர்ந்தது. ஶ்ரீராதா கிருஷ்ண பிரேம பக்தியின் சக்தியை அளவிடவே முடியாது. இந்த பிரேம பக்தியினால் மட்டுமே இறுதியில் ஒருவரை அனைத்து வைகுந்த லோகங்களுக்கும் மேலான கோலோகம் என்ற கிருஷ்ண லோகத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
Published on 12 November 2025 Modified on 17 November 2025 28 downloads
"வெண்ணெய் திருடன்" என்ற இந்த சிறிய புத்தகம், முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் மிக பிரகாசமான லீலைகளில் ஒன்றின் சுருக்கமான ஆய்வாகும்.
இந்த லீலை, மிகப்பரந்த மரம் போன்ற வேத இலக்கியத்தின் பழுத்த பழமான பக்தி மார்க்கத்தில் மிக உயர்ந்த பிரேம பக்தர்களாலும் மற்றும் ஆன்மீகத்தில் பழுத்து பரம உண்மையை அறிந்த அறிஞர்களாலும் மிகவும் போற்றப்படும் பாகவத புராணத்தில் காணப்படுகிறது.
இந்த புத்தகத்தைப் படிக்கும் பக்தர்கள் கிருஷ்ண பிரேமையில் மென்மேலும் உயர்வு பெற இது நிச்சயமாக உதவும் என்று நம்புகிறோம்.
Published on 13 November 2025 Modified on 13 November 2025 29 downloads
இந்தியாவின் பண்டைய வேத நூல்களிலிருந்து நாம் அறியும் இளவரசர் பிரஹ்லாதனின் புகழ்பெற்ற காவியம் இது. நீண்ட காலத்திற்கு முன்பு, ஹிரண்யகசிபு என்ற தீய மன்னன் அரக்கக் குணத்துடன் முழு பிரபஞ்சத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.
ஆனால் அவனது மகன் பிரஹ்லாதன், குழந்தையாக வயிற்றில் இருக்கும்போதே நாரத முனிவரிடம் உபதேசம் கேட்டதால் எப்போதும் பகவானை தியானிப்பதில் மூழ்கியிருந்தான். எந்த தொந்தரவும் மற்றவர்களுக்கு கொடுக்காமல் குறிப்பாக மிகச் சிறந்த விஷ்ணு (கிருஷ்ண) பக்தனாக வாழ்ந்து வந்தான். ஆன்மீக வாழ்க்கை மீதான சிறுவனின் இயல்பான விருப்பத்தைக் கண்டு, தன் சொந்த மகன் பிரஹ்லாதனை ஒரு பரம எதிரியாகக் கருதி, தந்தை ஹிரண்ய-கசிபு எத்தனையோ விதமாக பிரஹ்லாதனைக் கொல்ல முயன்றான். ஆனால் அவனது அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்தன.
மேலும் இந்த புத்தகத்தில் ஶ்ரீநரசிம்ம தேவரின் அவதாரத்தையும் விரிவாக படிக்கிறோம். பிரஹ்லாத் மகாராஜாவின் போதனைகளைப் பின்பற்றினால், நாமும் இறைவனின் அச்சமற்ற தூய பக்தர்களாக மாறுவோம்.
Published on 13 November 2025 Modified on 14 November 2025 31 downloads
ஒரு சமயம், ஶ்ரீசைதன்ய மகாபிரபு தன் சிஷ்யர்களுக்கு உபதேசித்த சில உபதேசங்களே இந்த ஶ்ரீ உபதேசம்ருதம் என்ற சிறு நூல். ஶ்ரீசைதன்ய மகாபிரபுவிடமிருந்து நேரடியாகக் கேட்ட ஶ்ரீல ரூப கோஸ்வாமி பின்னர் அவற்றை சுலோகங்களாக நமக்கு அளித்தார்.
இந்த சிறு புத்தகத்தில், ஸ்ரீல ராதா-ரமணா தாச கோஸ்வாமி, ஸ்ரீல பக்திவினோத தாகுரா மற்றும் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதர் ஆகியோரின் விளக்கவுரைகள் உள்ளன. ஸ்ரீமத் பக்திவேதாந்த நாராயண கோஸ்வாமி மகாராஜாவின் இந்தி பதிப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஸ்ரீ உபதேசம்ருதம் பக்திப் பாதையைப் பின்பற்றுபவர்களுக்கு இன்றியமையாத வழிமுறைகளை வழங்குகிறது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றாமல், தூய பக்தியின் மண்டலத்திற்குள் நுழைவது, குறிப்பாக ராகனுக-பக்தி என்ற மிக உயர்ந்த பக்தி மார்க்கத்தைப் பின்பற்றுவது கடினம் மட்டுமல்ல, சாத்தியமற்றது.
Published on 17 November 2025 Modified on 17 November 2025 51 downloads
இந்த சிறு புத்தகம் ஸ்ரீ ஸ்ரீமத் பக்திவேதாந்த நாராயண கோஸ்வாமி மகாராஜா, தனது சிக்ஷ ஆன்மீக குருவும் மிக நெருங்கிய அன்பான நண்பருமான ஸ்ரீல ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவைப் பற்றிய நினைவுகளின் தொகுப்பாகும்.
இந்த புத்தகம், 1947 -இல் அவர்களின் முதல் சந்திப்பிலிருந்து 1977 -இல் ஸ்ரீல பிரபுபாதர் இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வரை இருவருக்கும் இடையிலான நெருக்கமான உறவின் உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
Published on 13 November 2025 Modified on 14 November 2025 28 downloads
இந்த சொற்பொழிவுகள் ஸ்ரீமத்-பாகவதத்தின் 11.2.37 -ஆம் சுலோகத்தை அடிப்படையாகக் கொண்டவை.
மேலும், "ஒரு புத்திசாலி ஒரு உண்மையான ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ், இறைவனின் கலப்படமற்ற பக்தி சேவையில் தயங்காமல் ஈடுபட வேண்டும் என்ற உண்மையையும், அவன் தன் குருவை வழிபாட்டுக்குரிய தெய்வமாகவும், தனது உயிராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்பதையும் இந்த புத்தகம் விளக்குகிறது.
Published on 12 November 2025 Modified on 17 November 2025 30 downloads
பகவத் கீதையின் 18-ஆம் அத்தியாயத்தில் 65-ஆவது சுலோகமாக வரும் கீதாசாரத்திற்கு ஶ்ரீல குருதேவர் அளிக்கும் மகத்தான விளக்கமே இந்த சிறு புத்தகம். இந்த சுலோகத்தின் கரு இதுதான்: "e உன் மனதையும் இதயத்தையும் என்னில் கொடு, என் பக்தனாக இரு, என்னை மட்டுமே வணங்கு, எனக்கு வணக்கங்களைச் செலுத்து, நீ அவ்வாறு செய்தால் நிச்சயமாக என்னிடம் வருவாய்."e இவ்வாறு ஶ்ரீகிருஷ்ண பகவான் முடிவில் கூறும் வாக்கியத்தை ஆராயும் ஒரு சுருக்கமான அற்புதமான படைப்பு இது.
இந்த சுருக்கமான வெளியீடு, ஶ்ரீகிருஷ்ணர் தன் சிறந்த பக்தர்களுடன் எவ்வாறு அற்புதமான லீலைகளைப் புரிகிறார் என்பதை அறிவது மட்டுமின்றி, இந்த சுலோகத்தின் மகிமைகளையும் நாம் தெளிவாக காண்கிறோம்.
Published on 13 November 2025 Modified on 14 November 2025 30 downloads
இந்த சிறு புத்தகம் ஸ்ரீல சனாதன கோஸ்வாமிபாதரின் ஸ்ரீ பிரஹத்-பாகவதாமிருதம் என்ற நூலுக்கு ஸ்ரீல பக்திவேதாந்த நாராயண கோஸ்வாமி மகாராஜா வழங்கிய மாசற்ற விளக்கவுரைகளையும் சொற்பொழிவுகளையும் உள்ளடக்கியது.
சிரமப்பட்டு ஸ்ரீ வைகுந்த தாமத்தை அடைந்த கோபகுமார் அங்கு எவ்வாறு மனச்சோர்வடைந்து, தனது சொந்த அதிருப்திக்கான காரணத்தைக் கூட அறிய முடியாமல் தவித்தார். அவரது சித்த ரூபத்துக்கு வைகுந்தம் உகந்தது அல்ல என்பதை அவர் தெரியாமல் ஶ்ரீவைகுந்த லோகத்தில் மிகவும் வாடினார். அந்த நேரத்தில் ஸ்ரீ நாரத ரிஷி அவரை அணுகி, கோபகுமாருக்கு சிக்ஷ-குருவாக (ஆன்மீக குருவாக) மாறி, கோபகுமாரரின் ஆன்மீக பயணத்தை முடிக்கத் தேவையான அறிவுரைகளையும் தத்துவங்களையும் அவருக்கு அளிக்கிறார்.
பின்னர் கோபகுமார் படிப்படையாக ஶ்ரீராம, ஶ்ரீதுவாரக மற்றும் மதுரா தாமங்களுக்கும் சென்று கடைசியில் கோலோக தாமத்தை அடைகிறார். எங்கே தன் இஷ்ட பிரியமான ஶ்ரீகிருஷ்ணர் மாடு மேய்ப்பதை கண்டு ஓடி அவரை தழுவுகிறார். இவ்வாறு தன் சித்த ரூபத்துக்கு உகந்த கோலோகத்தை அடைந்து அங்கே அவர் நிரந்தரமாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
hare kṛṣṇa hare kṛṣṇakṛṣṇa kṛṣṇa hare harehare rāma hare rāmarāma rāma hare hare